districts

தொடர் மழையால் நெல் மூட்டைகள் சேதம் முன்னையம்பட்டி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 25 -  தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தாலுகாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் முன்னை யம்பட்டி கிராமத்தில் திறந்தவெளி சேமிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.  இந்த திறந்தவெளி சேமிப்பு மையத் தில் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் அட்டிகளை  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மரு.சு.பிரபாகர், தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், “இந்த முன்னையம்பட்டி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத் தில் சுமார் 26,000 மெ.டன் நெல் இருப்பு  வைத்து பாதுகாக்கப்பட்டு, நாளொன் றுக்கு அரவை முகவர்களுக்கு 350  மெ.டன்னும், மற்றும் ரயில் மார்க்கமாக  வெளி மாவட்டங்களுக்கு 400 மெ.டன் இயக்கம் செய்யப்பட்டு மொத்தம் 10,000 மெ.டன் வரை இயக்கம் செய்யப் பட்டு, தற்போது 16.196 மெ.டன் இருப் பில் உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலை யில், அவசர அவசியம் கருதி கூடுதல்  பணியாளர்கள் பணிக்கப்பட்டும், அதிக அளவில் சுமைதூக்கும் தொழிலா ளர்கள் அமர்த்தப்பட்டும், இயக்கப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,  அட்டியில் உள்ள நெல் மூட்டைகளை தார்ப்பாய்கள் மூலம் மூடி பாதுகாப் பாக பராமரிக்கப்பட்டு உரிய நேரத்தில்  தார்ப்பாய்களை அகற்றி காற்றோட்ட மாக விடப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  பெய்த கனமழையினால் அடி அட்டி யில் உள்ள மூட்டைகளில் உள்ள நெல்  சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. அதனை சுத்தம் செய்வதற்கு அதிகமான  தினக்கூலி பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அடி அட்டியில் உள்ள நெல் மூட்டைகளை சுத்தம் செய்யும் பணியும், சுத்தம் செய்து புதிய சாக்கில்  அள்ளும் பணியும் இந்த மையத்தில் உள்ள சுமார் 16,000 மெ.டன் நெல்  மூட்டைகளும் அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணியும் இரண்டு வாரங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. விவசாயிகளின் நலன் கருதி குறுவை காலங்களில், ஓர் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நேரடி நெல்  கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத் தப்பட்டு, குறுகிய காலத்தில் அதிக  அளவில் நெல் மூட்டைகள் கொள்முதல்  செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகள்  மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங் களில் இருப்பு வைக்கப்பட்டது.  தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக காற்றோட்டம் போதிய  அளவில் விட இயலாத காரணத்தி னால், அடி அட்டியில் உள்ள சாக்கு கள் சேதமடைந்து நெல்மணிகள் அடி  அட்டியில் சிதறி விடுகின்றன. சிதறிய நெல்மணிகளை தினக்கூலி பணியாளர் களை அதிக அளவில் அமர்த்தி புதிய  சாக்குகளில் அள்ளி எவ்வித இழப்பும்  ஏற்படா வண்ணம் அரவை முகவர் களுக்கு அனுப்பும் பணியும் நடை பெற்று வருகிறது” என மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்தார்.

;