districts

img

அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தை உடனே துவங்குக! வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.19-- நூறு நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக துவக்க வேண் டும். காலை 7 மணிக்கே வேலைக்கு வரவேண்டும் என வற்புறுத்தும், சட்ட விரோ தப் போக்கை கைவிட வேண் டும். விலைவாசி உயர்வுக்கு  ஏற்ப கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாட்களை 200 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.  பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத் திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வேலை அட்டை கேட்பவரிடம் வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டினால் தான் வேலை அட்டை வழங் கப்படும் என்ற சட்ட விரோ தப் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.  தஞ்சாவூர், திருவோ ணம், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, அம்மாபேட்டை, பூதலூர் திருவையாறு ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம், விதொச தலைவர்கள் கலந்து கொண்டனர்.

;