தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் தலைமை வகித்தார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா புதிய மின்மாற்றியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.