districts

மோட்டா ரக அரிசிக்கு போதிய வரவேற்பு இல்லை வேளாண் துறை இயக்குநர் தகவல்

தஞ்சாவூர்/திருவாரூர், ஜூலை 3-  தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும்  உழவர் நலத் துறை சார்பில் காட்டுத் தோட்டம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை  துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம்  குறித்து விவசாயிகளுடன் கலந்துரை யாடல் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஏக்க ருக்கு உரிய உரங்கள், அதன் அளவுகள்  குறித்த விவரங்கள் சொல்லப்பட்டன. குறுவை தொகுப்பு திட்டத்தில், விதை  விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்கு, 2,400 குவிண்டால் அளவுக்கு விதைகள் வழங்கும் திட்டங்கள் குறித்தும் விவ சாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. குறு வைப் பருவத்தில் இந்தாண்டு சிறப்பு  திட்டமாக மாற்றுப் பயிர்களை பயிரிடு வதற்காக 22,000 ஏக்கர் பரப்பளவில், உளுந்து, எண்ணெய் வித்துக்கள், சிறு தானிய விதைகள் வழங்குவது குறித்தும்  விவசாயிகளிடம் கூறப்பட்டது.  அதேபோல, உரம் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்க அரசால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், உரக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்ட விவரங்களும், உரங்கள்  தட்டுப்பாடின்றி கிடைக்க செய்யப்பட் டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் எடுத்துரைக் கப்பட்டன. பயிர் கடன் வழங்குவது தொடர்பாக கேட்கப்பட்டுள்ளது.

விவ சாயிகளுக்கு சிட்டா அடங்கல் விரை வில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் குறு வைத் தொகுப்பு திட்டத்தில் விவசாயி கள் பயன்பெறும் வகையில் சிறப்பு  முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  எனவே, விவசாயிகள் இதை பயன் படுத்தி டெல்டாவில் 5 லட்சத்து 20 ஆயி ரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் யூரியா இருப்பில்  உள்ளது. டிஏபி தேவையான அளவு  கை இருப்பு உள்ளது. உரங்கள் தட்டுப் பாடு இன்றி கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  டெல்டா உள்ளிட்ட ஏழு மாவட்டங் களில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத் தில் 13 ஆயிரம் பேர் இதுவரை பதிவு  செய்துள்ளனர். சுமார் 1600 பேர்  அதற்கான ஆணையை பெற்றுள்ளனர். பயிர் காப்பீடு தொடர்பாக தமிழக அரசு  சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு, அது  தொடர்பான அறிக்கைகள் ஒரு வாரத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்குண்டான அறிவிப்புகள் வெளி யாகும்.  மோட்டா ரக அரிசிக்கு பொதுமக்க ளிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால், அதை சாகுபடி செய் வதை விவசாயிகள் படிப்படியாக குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அவர்கள் அந்த ரகப்  பயிர்களை சாகுபடி செய்ய வேண்டாம்  என வற்புறுத்தவில்லை.  மழை, புயல்களில் மோட்டா ரகங்க ளின் கதிர்கள் கீழே சாயாமல் தாங்கி நிற்பதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே, அது போன்ற நெல் ரகங் களை உற்பத்தி செய்ய வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர். இதுகுறித்து வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆலோசிக்க திட்டமிடப் பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இதுவரை 2,30,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

திருவாரூர்
குறுவை சாகுபடி மற்றும் குறுவை  தொகுப்பு திட்டம் தொடர்பாக விவசாயி களுடனான கலந்தாலோசனை கூட்டம் வேளாண்மைத் துறை இயக்கு நர் ஆ.அண்ணாதுரை தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் நடைபெற்றது. திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத் தில் 1,62,500 ஏக்கரில் குறுவை சாகுபடி  செய்யப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.13. 57 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தினை அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன்கள் மற்றும்  திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவ சாயிகளுடன் கலந்துரையாடல் நடை பெற்றது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு இருக்கிற இடர்பாடுகளை சரிசெய்வதற் கான அனைத்து நடவடிக்கையையும் எடுக்க இக்கூட்டம் உறுதுணையாக இருக்கும் என வேளாண்மைத் துறை இயக்குநர் அ.அண்ணாதுரை தெரிவித் தார்.

;