districts

img

தஞ்சை மாநகராட்சி உறுப்பினராக எம்.வைஜெயந்திமாலா பதவியேற்பு

தஞ்சாவூர் மாநகராட்சி 35 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.வைஜெயந்திமாலா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சி. பழனிவேலு, என்.சரவணன், மாநகரச் செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் கரிகாலன், லூகாஸ், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.