districts

img

தமிழகம் முழுவதும் மே தின கொண்டாட்டம்

 கும்பகோணம், மே 2- உலக உழைப்பாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் கும்பகோ ணம் மாநகரம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்க கட்சி கொடிகள் ஏற்றப்பட்டன. விவசா யிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நட ராஜன், சிஐடியு மாவட்ட பொருளாளர் கண்ணன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில செயலா ளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொப்பம்பாளை யம் தெருவில் உள்ள மதுரை லீலாவதி நினைவு ஆட்டோ ஓட்டுநர் சங்க கொடியை கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் ஏற்றி வைத்தார்.

நாச்சியார்கோயில் 
திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோயிலில் ஆட்டோ தொழி லாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், குத்துவிளக்கு லேத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேரணியாக வந்து சிஐடியு செங்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். சிஐடியு தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை
மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவா சன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங் கம்பாடி, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளி டம், மயிலாடுதுறை ஒன்றியங்களுக் குட்பட்ட 250-க்கும் மேற்பட்ட இடங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா கொண்டாடப் பட்டது. திருக்கடையூர் ஒன்றிய அலுவல கம் முன்பு கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் ஏற்றி வைத்தார்.

குடவாசல்
பேரளம் ரயில்வே குட்ஷெட்டில் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஞாயிறன்று மாலை பேரணியாக சென்று மே தின கொடி ஏற்றி கொண்டாடி உறுதி மொழி ஏற்றனர். பேரணிக்கு சுமைதூக்கும் சங்க மாவட்ட பொருளாளர் ஜெ.மனோகரன் தலைமை வகித்தார். பேரளம் ரயில்வே குட்செட் இருந்து புறப்பட்ட பேரணி கடைவீதி வழியாக சென்று பேரளம் பேருந்து நிலையம் அருகே அமைக் கப்பட்ட பேரணி பொதுக்கூட்ட மேடை யில் நிறைவடைந்தது. சிஐடியு சங்க மாவட்ட துணை செயலாளர் ஆர். வைத்தியநாதன் பேசினார்.

கரூர்
கரூர் பேருந்து நிலையம் காமரா ஜர் சிலை முன்பு இருந்து மாபெரும் பேரணி துவங்கியது. சிஐடியு சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ரகுராமன் பேரணியை துவக்கி வைத்து பேசினார். வட்டாட்சியர் அலுவலகம், ஜவஹர் பஜார், பழைய திண்டுக்கல் சாலை, லைட் ஹவுஸ் வழியாக கரூர் உழவர் சந்தையில் பொதுக்கூட்ட மேடையில் முன்பு பேரணி நிறைவடைந்தது.  இதில், ஏஐடியுசி சங்க மாவட்ட தலைவர் கே.குப்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு  சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகே சன், சிபிஐ மாவட்ட செயலாளர் எம்.ரத்தினம், ஏஐடியுசி சங்க மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ். வடிவேலன் ஆகியோர் பேசினர்.  உள்ளாட்சி சங்க மாவட்ட செய லாளர் கா.கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.ஹோச்சுமின், மாவட்ட டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ப.சரவணன், அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநில தலை வர் எஸ்.ரத்தினமாலா, மாவட்ட செயலா ளர் என்.சாந்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலா ளர் கே.கலாராணி உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அரியலூர்
ஆண்டிமடம் வட்டம் வாரியங்கா வல் கிராமத்தில் மே தின கொடியேற்ற நிகழ்ச்சி சிபிஎம் கட்சி சார்பாக கிளை செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் கொடியேற்றினார். ஜெயங்கொண்டம், அரசு போக்கு வரத்து கழக பணிமனையில் சிஐடியு சார்பில் மேதின கொடியேற்ற நிகழ்ச்சி வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.மணிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜெயங்கொண்டம் ஒன்றியம் உட்கோட்டை, யுத்தப்பள்ளம், குறுக்கு ரோடு, கீழசெங்கல்மேடு, வீரசோழ புரம், முத்துச்சேர்வாமடம், குண்டா வளி, இளைய பெருமாள் நல்லூர், புதுச்சாவடி, சின்னவளையம், அடிப் பள்ளம், ஜீப்ளி ரோடு, துளாரங்குறிச்சி, கீழக்குடியிருப்பு, மகிமைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேதினக் கொடி ஏற்றப்பட்டது.

;