districts

img

டெல்டா மாவட்டங்களில் மே தின கொண்டாட்டம்

பெரம்பலூர், மே 1 - உழைக்கும் மக்களின் உன்னத திருவிழாவான மே தின கொடியேற்ற விழா ஞாயிற்றுக்கிழமை டெல்டா மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் அருகே துறைமங்க லத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி யேற்றி கொண்டாடப்பட்டது. ஒன்றிய  செயலாளர் எம்.கருணாநிதி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி.ரமேஷ் கொடி ஏற்றி துவக்கி  வைத்தார். சிஐடியு மாநில செயலாளர்  சிங்காரன் மே தின விளக்க உரை யாற்றினார். புதிய பேருந்து நிலை யம் ஆட்டோ சங்கம், நான்குரோடு சிஐடியு அலுவலகம், வேப்பந்தட்டை உள்ளிட்ட இடங்களிலும் மே தின கொடியேற்றப்பட்டது. 

திருச்சிராப்பள்ளி
திருச்சி பழையபால்பண்ணை, அரியமங்கலம், ரயில்நகர், காட்டூர், திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம், கக்கன்காலனி, பர்மாகாலனி, செல்வ புரம், காந்திநகர் பகுதிகளில் நடை பெற்ற மே தின கொடியேற்று விழா விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர்  தலைமை வகித்து சிஐடியு கொடியை  ஏற்றினார். மேலும் காட்டூர் பகுதியில் மேதின கல்வெட்டை திறந்து வைத்து  சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய பால், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டியன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவாருர்
திருவாரூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் மே தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி கொடியேற்றினார். சிஐடியு  மாவட்ட செயலாளர் டி.முருகை யன், அலுவலக செயலாளர் எஸ்.ராம சாமி, மாதர் சங்க நிர்வாகி மாலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  குடவாசல், வலங்கைமான், கொர டாச்சேரி உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் எழுச்சியாக மே தின கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சாவூர் மாவட்டக்குழு அலுவ லகத்தில் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். சிஐடியு கொடியினை மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் த.முருகேசன் ஏற்றி வைத்தார்.

பாபநாசம்
அய்யம்பேட்டையை அடுத்த ரெகுநாதபுரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்  தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித் தார். ஊராட்சியில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அரசு பாலிடெக் னிக் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ரெகுநாதபுரத்தில் அரசு, தனியார் பேருந்துகள் நின்றுச் செல்ல வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளிக் கடை, ராஜகிரி, கொத்தங்குடி ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

அறந்தாங்கி
அறந்தாங்கி காந்தி பூங்கா சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே மே  தின கொடியேற்று விழா நடை பெற்றது. தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில், மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கொடியேற்றினார். அறந்தாங்கி நகராட்சி அலுவலகம், பொன்னம ராவதி உள்ளிட்ட இடங்களில் கொடி யேற்றி கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாகை மாவட்ட குழு அலுவல கத்தில் மே தின செங்கொடியை நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து ஏற்றி வைத்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி மற்றும் நகர குழுவினர் கலந்து  கொண்டனர். கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியகுடியில் கட்சியின் நாகை மாவட்டக் குழு சார்பில் மே தின சிறப்பு பேரவை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ்  சந்திரபோஸ் தலைமை வகித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி, நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து உரை யாற்றினர்.

அரியலூர்
அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட செய லாளர் துரைசாமி, மாவட்ட பொருளா ளர் சிற்றம்பலம் உட்பட பலர் கலந்து  கொண்டனர். அரசு சிமெண்ட் ஆலை, இ.பி.ஆபிஸ், அரசு போக்குவரத்து பணிமனை, வாலாஜாநகரம், பெருமாள் கோவில் ஸ்டேண்ட், எருத்துகாரன்பட்டி, ஸ்டேடியம் தரைகடை, தாமரைகுளம், ஒட்டக் கோவில், சிஐடியு அலுவலகம் என  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த அமைப்பின் சார்பில் கொடி  ஏற்றப்பட்டது.