districts

img

மருதுபாண்டியர் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

தஞ்சாவூர், செப்.6 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பு துவக்க விழா திங்கட்கிழமை நடைபெற்றது.  மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, வகுப்புகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மாணவர்கள் நற்பண்புகளோடு கல்வியை சிறப்பாக கற்பிக்க வழிகாட்டியாக எமது கல்லூரி பேராசிரியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் இங்கு கல்வி பயின்று வெளியில் செல்லும் போது, தலைசிறந்த மாணாக்கராக உருவாக்கிக் கொடுப்பதை எங்களது நோக்கமாக கொண்டுள்ளோம். ஆகவே மாணவர்கள் மிகச்சிறந்த முறையில் கல்வியை கற்று தேர்ச்சி அடைய வேண்டும்” என்றார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர். ப.சுப்பிரமணியன், மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  முன்னதாக உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் இரா. இராஜகுமார் வரவேற்புரையாற்றினார். கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் ஏ.இமாக்குலேட் மெர்சி நன்றி கூறினார்.   விழாவில் ஒவ்வொரு மாணவ-மாணவியருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பின்னர் அந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியை தமிழ் துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.

;