கும்பகோணம், ஜூலை 27 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கும்ப கோணம், பாபநாசம் மற்றும் திருவிடை மருதூர் வட்டங்களுக்கு உட்பட்ட விவசாயி களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட் சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டாட்சியர்கள் கும்ப கோணம் தங்க பிரபாகரன், திருவிடை மருதூர் சந்தனவேல், பாபநாசம் மதுசூத னன், தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் இளங்கோ உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற் றனர். கூட்டத்தில், கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய ரூ.1200 கோடி இழப்பீட்டுத் தொகையை இதுவரை வழங்க வில்லை. கும்பகோணம் மற்றும் பாபநாசம் வட்டங்களில் உள்ள மெலட்டூர், ராஜகிரி, நீடா மங்கலம், உத்தாணி, சோழபுரம் போன்ற கிராமத்தில் பலநூறு ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல் சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்கப்படுவதால் மகசூல் பாதிக்கப் படும். எனவே வேளாண்மை துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், அதிகமான நீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படு கிறது. ஆனால் காவிரியாற்றில் போதுமான அளவிற்கு நீரை தொடர்ந்து விடாததால், பல இடங்களில் ஏ பிரிவு, பி பிரிவு மற்றும் சி பிரிவு வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என குற்றம் சாட்டினர். நீரொழுங்கியை சீரமைக்காமல் பொதுப் பணித் துறையினர் அலட்சியமாக செயல்படு வதால், சாக்கோட்டை அருகேயுள்ள மலையப் பநல்லூர், சிவபுரம், அண்டக்குடையான், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்க ளில் சாகுபடி செய்திருந்த நெல், பருத்தி, எள், பயறு வகைகள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது குறித்து விவசாயிகள் கூறினர்.