districts

img

பிரதமர் மோடி அதானியின் ஏஜெண்டா? கும்பகோணம் கூட்டத்தில் உ.வாசுகி கேள்வி

கும்பகோணம், மார்ச் 29- ஒன்றிய பாஜக அரசின் மக்கள்  விரோத, தொழிலாளர் விரோத,  ஜனநாயக விரோத நடவடிக்கை களை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது  கூட்டத்திற்கு சிபிஎம் குடந்தை மாநகரச் செயலாளர் கா.செந்தில் குமார் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்  டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், குடந்தை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.செல்வம் மற்றும் மாநகரக்  குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உ.வாசுகி பேசு கையில், ‘‘அதானிக்காக பிரதமர்  மோடி அலைபாய்கிறார். அதானி  ஊழலை மறைக்கும் நோக்குடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசார ணைக்கு மறுக்கிறார். தமிழ்நாட் டில் பாஜக தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்எஸ்எஸ்-க்கு ஏஜெண்  டாக வேலை செய்கிறார். 20க்கும் மேற்பட்ட கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளார். 4 மாதம் கழித்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம்  உள்ளதா என இங்கு கேள்வி எழுப்புகிறார்.  தமிழ்நாடு அரசு பெண்களுக் கான உரிமைத் தொகை ரூ.1000  மற்றும் காலை உணவுத் திட்டத்தை  சிபிஎம் ஆதரிக்கிறது. அதே வேளை யில் ஆதி திராவிடர்களுக்கான நிதி  ஒதுக்கீடு பட்ஜெட்டில் குறைக்கப்  பட்டுள்ளது. அதே போல் துப்பு ரவு பணிக்காக நவீன இயந்திரங் களை வாங்கி, விருப்பப்பட்ட அனைத்து சாதியினரும் அந்த வேலையை செய்திடவும், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலை யை கைவிட வழிவகை செய்யவும் வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி  அரசு ஊழியர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். டாஸ்மாக் கடைகளை குறைக்க திட்டமிட வேண்டும்’’ என பேசினார்.

;