districts

மாவட்ட எல்லையை காரணம் காட்டி திருமலைசமுத்திரம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுப்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தஞ்சாவூர், மார்ச் 24- மாவட்ட எல்லையை காரணமாக கூறி திருமலைசமுத்திரம் பகுதி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுப்பதால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் வட்டம் திருமலைசமுத்திரம் கிராம விவசாயிகள், புதுக்கோட்டை மாவட்ட  எல்லையில் அமைந்துள்ள பிடாரி ஏரி மூலம்  சுமார் 300 ஏக்கரில் பாசன வசதி பெற்று, ஒரு  போக சம்பா நெல் சாகுபடி செய்து வருகின்ற னர். தற்போது நெல் அறுவடை முடிந்துள்ளது.  ஆனால் திருமலைசமுத்திரம் பகுதியில் நெல்  கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை,  தஞ்சாவூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங் களுக்கு கொண்டு வந்து ஆன்லைன் பதிவு  முறை கடைப்பிடிக்கப்படுவதால் மாவட்ட எல்லையை காரணமாக கூறி விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் அறுவடை  செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடி யாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலா ளர் என்.வி.கண்ணன் கூறுகையில், தஞ்சாவூர்  - புதுக்கோட்டை மாவட்ட எல்லையோரங்க ளில் உள்ள திருமலைசமுத்திரம், குரும் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகளின் வயல்கள் புதுக்கோட்டை மாவட்ட எல்லை யில் இருப்பதால் அங்கு விளைந்த, அறுவடை  செய்யப்பட்ட நெல்லை தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடிந்தது. தற்போது நெல் விற்பனைக்கு ஆன்-லை னில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள் ளதால், மாவட்டம் விட்டு மாவட்டம் என்று வருவதால், ஆன்-லைனில் பதிவு செய்ய முடியவில்லை. பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து, மகசூலான நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பில்லாமல் வைத்துள்ளனர்.   எனவே இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை விற்பனை செய்ய மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் ந.உமாமகேஸ்வரி கூறு கையில், “ஆன்லைன் பதிவுக்கு முன்பு திரு மலைசமுத்திரம் விவசாயிகளின் நெல் தஞ்சா வூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப் பட்டது. தற்போது ஆன்லைன் பதிவு  கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெல் ஆவணங்களின் அடிப்படையில் விற்பனைக்காக பதிவேற் றம் செய்ய முடியவில்லை. ஆனாலும் விவசா யிகள் பாதிக்கக் கூடாது என்பதால் புதுக் கோட்டை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கூறி, ஒரு கொள்முதல் நிலையத்தை மாவட்ட எல்லையோரத்தில் திறக்க வலியுறுத்தியுள்ளோம். விரைவில் திறப்பதாக கூறியுள்ளனர்” என்றார்.

;