districts

img

ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா மின்னொளியில் ஒளிர்ந்த தஞ்சாவூர் பெரியகோயில்

தஞ்சாவூர், டிச.2-  ஜி-20 அமைப்பில் இந்தியா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ்,  ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகள் உள்ளன. இந்த அமைப்புக்கு ஆண்டுதோறும்  ஒவ்வொரு நாடும் தலைமையேற்கும். இந்த வரிசையில் ஜி-20 அமைப்புக்கு இந்தியா டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு தலைமை பொறுப் பேற்றுள்ளது. இதையொட்டி, நாடு முழு வதும் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20  என்ற அடையாள சின்னத்துடன் மின்னொளி யில் ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, வியாழனன்று இரவு தஞ்சா வூர் பெரியகோயில் நுழைவு வாயிலிலுள்ள மராட்டா வாயில் சுவரில் ‘ஜி-20’ என மின்னொ ளியில் ஒளிரச் செய்யப்பட்டது. மேலும், அக ழியையொட்டி உள்ள கோட்டைச் சுவரும், உட்புறமுள்ள கோட்டைச் சுவரும் மின்னொ ளியால் ஒளிர்ந்தன. இந்த ஏற்பாடு ஒரு வாரத் துக்கு தொடரும் எனக் கூறப்படுகிறது.

;