districts

தமிழ்ப் பல்கலை.யில்  சுற்றுச்சூழல் அறிவியல்  மன்றம் தொடக்க விழா

தஞ்சாவூர், அக்.11 - சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய தினங்களையும், விழிப்பு ணர்வுகளையும் மாணவர்களைக் கொண்டு நடத்தி, அவர்கள் பயன்பெறும் வகையிலும் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்கவும், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறி வியல் துறையில் முது அறிவியல் பயிலும் மாணவர் களுக்கான சுற்றுச்சூழல் அறிவியல் மன்றம் தொடக்க விழா தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத்தில் நடை பெற்றது.   இந்நிகழ்வுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) முனைவர் சி.தியாகராஜன் தலைமை வகித்தார். தொ டர்ந்து “இந்தியாவில் நிலைத்த வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. டென்னிசன் சிறப்புரையாற்றினார். சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையின் தலைவர் முனைவர் த.ராகேஷ் சர்மா நோக்கவுரையாற்றினார். உதவிப் பேரா சிரியர் முனைவர் கு.க.கவிதா வரவேற்றார். மன்றத்தலை வர் மாணவர் ஜெ.ராஜ்கிருஷ்ணன் நன்றி கூறினார்.  இந்நிகழ் வில் அறிவியல் புலத்தின் அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

;