districts

நாச்சியார்கோவில் கூலி உயர்வு கோரி குத்துவிளக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

கும்பகோணம், பிப்.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு  தயார் செய்யப்படும் பித்தளை குத்து விளக்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப் பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு  தயார் செய்யப்படும் விளக்குகள் அரசு அலுவ லகங்களின் முக்கிய விடுதிகளில் வரவேற்ப ரையில் முன்னின்று காட்சியளிக்கிறது. சுமார் 500 பட்டறைகளில் 3000 பேருக்கு மேல் குத்துவிளக்கு தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அன்றாட கூலி வலை செய்து  அதில் வரும் குறைந்தபட்ச வருமானத்தை வைத்துக்கொண்டு, தங்களது பிள்ளைகள் படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவு டன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நி லையில் கடுமையான விலைவாசி உயர்வால்  தொழிலாளர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர்.  இது தொடர்பாக நாச்சியார்கோயில் பித்தளை குத்துவிளக்கு வியாபாரிகள் சங்கத்திடம், தங்களுக்கு வழங்கப்படும் குத்து விளக்கிற்கு 80 சதவீத கூலி உயர்வு வேண்டும்  என கடந்த மாதம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு வியாபாரிகள் சங்கம் அதை நிராகரித்து 7 சத வீதம் மட்டுமே கூலி உயர்வு தரப்படும் என கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்தது.  இதனை ஏற்றுக்கொள்ளாத குத்து விளக்கு உற்பத்தி தொழிலாளர்கள், 80 சத வீத கூலி உயர்வு வேண்டுமென வலியுறுத்தி,  கூலி உயர்வு பெறும் வரை வேலை நிறுத்தத் தில் ஈடுபடுவது என முடிவு செய்து கடந்த பிப்.3 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகை யில், “விலைவாசி உயர்வினால் நியாயமான கூலி உயர்வு கேட்டும் கிடைக்கவில்லை. இத னால் மாற்று தொழில் செய்யக்கூட எங்களால்  முடியவில்லை. குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு உத்தரவினால் வேலை யும் இல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடி யில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி  தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றிட வேண்டுகோள்” விடுத்தார். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத் தால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு குத்துவிளக்குகள் விற்பனையாவது தடை பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

;