districts

தஞ்சையில் மதப் பதற்றத்தை உருவாக்க இந்து அமைப்புகள் முயற்சி சிபிஎம் போராட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர், நவ.25- தஞ்சாவூர் கணபதி நகர் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில், கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் தலைமையில் நடைபெற்றது.  இதில், மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசகி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் - அய்யம் பேட்டை பாபநாசம் வழியாக கும்ப கோணம் செல்லும் மாநில நெடுஞ் சாலை மிக மோசமாக, இரு சக்கர வாகனங்கள் கூடச் செல்ல முடியாத வகையில் போக்குவரத்துக்கு பய னற்ற நிலையில் உள்ளது.  விக்கிரவாண்டி - தஞ்சை நான்கு வழி சாலை நடைபெறுவ தைக் காரணம் காட்டி பராமரிக்கப் படாத நிலை உள்ளது. அதே நேரத்தில், விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழிச் சாலை பணிகளும் முடிந்த பாடில்லை.  எனவே, இப்பகுதியில் அடிக் கடி நடக்கும் விபத்துக்கள், மர ணங்களை தவிர்க்கும் வகையில், தஞ்சை - அய்யம்பேட்டை - பாப நாசம் வழி கும்பகோணம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.  இந்தச் சாலையை சீரமைக்கா மல் அலட்சியம் காட்டி வரும் நெடுஞ்சாலைத் துறையை கண் டித்து நவம்பர் 29-ஆம் தேதி தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோ ணம் ஆகிய இடங்களில் நெடுஞ் சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.  

அண்மையில், கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் இந்து முன்னணி மாநகரச் செயலாளர் சக்கரபாணி மதப் பதற்றத்தை உரு வாக்கும் நோக்கில், அவரே பெட்ரோல் பாட்டிலை தனது வீட்டில் வீசிக்கொண்டு, பெட் ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். அவருக்கு ஆதரவாக பாஜகவினர் திரண்டு உள்ளனர். காவல்துறை விசார ணையில் குட்டு வெளிப் பட்டுள்ளது.  இது இப்பகுதியில் மட்டு மல்ல, தமிழகம் முழுவதும் வெடி குண்டு பதற்றத்தையும், மத மோத லையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். தமிழ கத்தில் பொய்யான குற்றச்சாட்டு களை கூறி மலிவான அரசியல் நடத்தும் பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கும்பகோணம் பகுதியில் இப்படிப்பட்ட விஷமத்தனமான செயல்களை செய்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, மதமோதலை திட்டமிட்டு உருவாக்கும், இந்த சம்பவத்தை கண்டித்தும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் கும்பகோணத்தில் கண்டன போராட்டம் நடத்தப் படும்’’ எனத் தெரிவித்தார்.

;