districts

img

கொள்ளிடம் ஆற்றில் ராட்சத குடிநீர் ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

தஞ்சாவூர், பிப்.11 -  குடிநீருக்காக புதிதாக ராட்சத ஆழ்துளைக்  கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,  கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கருப்புக்  கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தஞ்சாவூர் மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கிராமம் கரையோரம்  கொள்ளிடம் ஆற்றில், ஏற்க னவே புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ராட்சத ஆழ்துளைக் கிணறு  அமைத்து அதன் மூலம் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், மேலும் புதிதாக 43 ஊர்க ளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து திருச்சென்னம்பூண்டி கிராம நிர்வாக  அலுவலர் அலுவலகம் முன்பு,  காங்கிரஸ்  ராஜேந்திரன், வழக்குரைஞர் வெ.ஜீவகுமார் ஆகியோர் தலைமையில், கிராம மக்கள்,  விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி வியாழக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.காந்தி, பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், சிபிஐ நிர்வாகி  துரைராஜ், நாம் தமிழர் கட்சி தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், “எங்கள் கிராமப் பகுதியில் கொள்ளிடம்  ஆற்றில்,  ஏற்கனவே மூன்று இடங்களில் மணல் குவாரிகள் இருந்ததால், நிலத்தடி நீர்  மட்டம் குறைந்து விட்டது. மேலும் கூட்டுக்குடி நீர் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 10 ஆயிரம்  லிட்டர் தண்ணீர் ஆழ்துளைக் கிணறு மூலம்  உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து,  தண்ணீரின் காரத்தன்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீண்டும், அப்பகுதியில் புதி தாக ஆழ்துளைக் கிணறு அமைத்தால், இப்பகுதி மக்கள்  வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய்விடும். விவசாயம் பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட  வேண்டும்.” என்றனர்.   போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பூத லூர் வட்டாட்சியர் பிரேமா பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை யடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

;