தஞ்சாவூர், பிப்.24- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு இன்ஸ்டிடியூட் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், தினசரி ரூ.100 ஊக்கத்தொகையுடன் கூடிய மருத்துவம் சார்ந்த செவிலியர் உதவியாளர், இலவச உடனடி வேலைவாய்ப்பு பயிற்சி துவக்க நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். தாளாளர் எஸ்.நாடிமுத்து வரவேற்றார். பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி குறிப்பேடு, பேனா, அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் நீலகண்டன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முதலுதவி பயிற்சியாளர் துளசி துரைமாணிக்கம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் நடராஜன் நன்றி கூறினார். முதல்கட்டமாக 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.