districts

நிலம் கையகப்படுத்தியதற்கு உரிமையாளருக்கு ரூ. 60 லட்சம் இழப்பீடு வழங்காத கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி

கும்பகோணம், அக்.18- இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுத்திய  கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய சாமி நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருக்கு சொந்தமான 12,500 சதுர அடி இடம்,  செட்டிமண்டபம் புறவழிச்சாலை பணிகளுக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் அருகில் இருந்த  பிற நில உரிமையாளர்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ.168 வீதம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், சுவாமிநாதனுக்கு மட்டும் சதுர அடி  ஒன்றுக்கு ரூ.42 என்று மட்டும் நிர்ணயம் செய்யப் பட்டது. இதனை எதிர்த்து இவர் கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார். இவ்வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு  சுவாமிநாதனுக்கு, ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை தமிழக அரசு வழங்க கால தாமதம் செய்து வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், கும்பகோணம் கோட்டாட்சி யர் இந்த இழப்பீட்டினை 2022 செப்டம்பர் 07  ஆம் தேதிக்குள் வழங்குவதாக உறுதி அளித் திருந்தார்.  அதன் பிறகும் இழப்பீடு வழங்காத நிலை யில், சம்பந்தப்பட்ட கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டதை தொடர்ந்து, முதன்மை சார்பு நீதிபதி, கும்பகோ ணம் கோட்டாட்சியர் அலுவலக வாகனத்தை  ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனைத்தொ டர்ந்து, கடந்த அக்.10 அன்று, கும்பகோணம் கோட் டாட்சியர் அலுவலக ஜீப் ஜப்தி செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த இழப்பீட்டினை வழங்க அரசு தரப்பில் எந்தவித உத்தரவாதமும் பாதிக்கப் பட்ட நபருக்கு தராத நிலையிலும், ஏற்கனவே  ஜப்தி செய்யப்பட்ட வாகனமும், இழப்பீட்டு தொகைக்கு ஈடானதாக இல்லாத காரணத்தினா லும், கும்பகோணம் கோட்டாட்சியரின் அலுவ லகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அமீனா, பாதிக் கப்பட்ட நில உரிமையாளர் சுவாமிநாதன், அவரது வழக்கறிஞர் ராஜவேல் ஆகியோர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோட் டாட்சியர் அலுவலகம் வந்தனர். ஆனால் அலுவ லகத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மின்விசிறி கள், 10-க்கும் மேற்பட்ட கணினிகள், வழக்கமான இருக்கைகள், ஏசி சாதனம் ஆகியவை  மாயமாகி வெறிச்சோடி காணப்பட்டது. தேவையில்லாத கோப்புகள், அகற்ற முடியாத பெரிய மேசைகள் சில மட்டுமே அலுவல கத்தில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, இருந்த பொருட்களை ஜப்தி  செய்து ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்த னர். இதனால் திங்களன்று கோட்டாட்சியர் அலு வலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.  ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலக ஜீப்  ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீடு தொகை வழங்க அரசு முன்வராத நிலையில், அசையும் பொருட் கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.  இழப்பீடு வழங்க மேலும் காலதாமதம் செய்தால், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தையும், அவரது அலு வலக அசையும் பொருட்களையும் ஜப்தி செய்ய  கோரி நீதிமன்றத்தை அணுகுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

;