districts

img

கடைகளில் எலிபேஸ்ட் - விஷக்கொல்லி பொருட்கள் விற்பனையை தடுத்திடுக!

தஞ்சாவூர், செப்.11-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாள் கருத்தரங் கம் நடைபெற்றது.  மனநல மருத்துவத் துறை துணைத் தலைவர் மீனாட்சி வரவேற்றார். சென்னை மனநல மருத்துவத் துறை  பேராசிரியர் டாக்டர் அசோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநக ராட்சி ஆணையர் க.சரவணகுமார் முன்  னிலை வைத்தார். கருத்தரங்கில் மருத்துவக் கல்லூரி  முதல்வர் ச.மருதுதுரை  தலைமை வகித்துப் பேசுகையில், தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதி கரித்து வரும் நிலையில் தற்கொலை யால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதி கரித்து வருவது வேதனை அளிக்கிறது. இந்திய அளவில் தற்கொலையால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம்  இரண்டாவது  இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகா ராஷ்டிரா மாநிலம் உள்ளது. தற்கொலை களை நாம் தடுக்க வேண்டும். அவர் களுக்கு அந்த எண்ணம் வராமலேயே இருக்க செய்ய வேண்டும். தற்கொலை பிரச்சனை தற்போது சமூக பிரச்ச னையாக மாறி உள்ளது. எலி பேஸ்ட் உள்ளிட்ட பல்வேறு விஷக் கொல்லிகள் சாதாரண பெட்டி  கடைகளிலே அதிக அளவில் கிடைக்கி றது. இதனை நாம் தடுக்க வேண்டும். எளிதான முறையில் எலி பேஸ்ட் கிடைப்ப தால் தற்கொலை எண்ணத்தில் உள்ள வர்கள் அதனை வாங்கிச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடைகளில் எலிபேஸ்ட் உள்ளிட்ட விஷக்கொல்லி பொருட்கள்  விற்ப னையை தடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணை யர் உத்தரவுபடி கடைகளில் எலிபேஸ்ட் விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருவது பாராட்டுக்கு உரியது. தொடர்ந்து இவ்வாறு செய்வது மூலம் அதன் விற்பனையை தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.  முன்னதாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மனநல மருத்துவத் துறை  சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்பு ணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  கொடிய சைத்து தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்  நமச்சிவாயம் வட்டாட்சியர் மணிகண் டன், ரெட் கிராஸ் பொருளாளர் முத்துக்  குமார் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

;