districts

பருத்தி ஏலம்

பாபநாசம்,  ஜூலை 16 - தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில்  பருத்தி ஏலம் நடந்தது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப் பாளர் தாட்சாயிணி, மேற் பார்வையாளர் அன்பழகன் முன்னிலையில் நடந்த பருத்தி ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதனை சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து  5670 குவிண்டால் பருத்தி  கொண்டு வரப் பெற்றது. கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், தேனி, செம்பனார் கோவில், குண்டூர், தெலுங் கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 வணிகர்கள், காட்டன் கார்ப்பரேஷன் இந்தியா கோயம்புத்தூர் உள்ளிட்டோர் ஏலத்தில் கலந்து  கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரி ரூ. 4 கோடி.

;