districts

img

ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போராட்டம்

தஞ்சாவூர், டிச.2-  மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய  அரசின் மீது, மக்கள் மன்றத்தில், மாற்றுத் திறனாளிகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் நூதனப் போராட்டம் தஞ்சாவூர், திருச்சியில் நடைபெற்றது.  ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளி களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியதுடன், புதிய உரிமைகள் சட்டம் 2016-ஐ  முழுமையாக அமல்படுத்த மறுக் கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை குறைந்த அளவு நபர் களுக்கு, பெயரளவுக்கு வழங்கப்படு கிறது. ஊனமுற்றோர் பயன்படுத்தும் கருவிகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்யப்படுகிறது.  மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் வகையில் பிரதமர் பேசு கிறார். இவ்வாறு ஒன்றிய அரசின் தவ றான கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திற னாளிகள் ஒன்றிய அரசின் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யும்  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சை ரயிலடியில் நடை பெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமை வகித்து, அறிமுக உரை யாற்றினார். மாவட்ட துணைச் செய லாளர் சாமியப்பன் வரவேற்றார். ஒன்றிய அரசின் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து மாவட்ட  தலைவர் டி.கஸ்தூரி, மாவட்டத்  துணைத் தலைவர் பழ. அன்புமணி  ஆகியோர் பேசினர். தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்டத் தலைவர் கே.பன்னீர் செல்வம் வழக்கை மறுத்துப் பேசி னார். சி.ஏ.சந்திரப்பிரகாஷ் நன்றி கூறி னார். தமுஎகச மாவட்டத் தலைவர் ச.ஜீவபாரதி மக்கள் மன்ற நடுவ ராக இருந்து வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.  இதில், நிர்வாகிகள் வி.ரவி, ஜி. ராதிகா, ஜி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர். பி.குமார் அறி முக உரையாற்றினார். குற்றப்பத்தி ரிகை தாக்கல் மன்றத்தின் நடுவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் செயல்பட்டார்.  குற்றப்பத்திரிகையை முன்வைத்து வாலிபர் சங்க மாநிலத் துணை தலைவர் பா.லெனின், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் வி.மணிமாறன் ஆகி யோர் வழக்கினை தொடுக்க, மாதர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ரேணுகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கோ.வி.வெற்றி செல்வன் ஆகி யோர் வழக்கினை மறுத்து வாதிட்ட னர்.

;