districts

img

முதலமைச்சரின் ‘ஊட்டம் தரும் காய்கறி தோட்டம்’

தஞ்சாவூர், ஜூன் 14 - வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக, விவசாயப் பெரு மக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தில் அன் றாட தேவைக்கான நஞ்சில்லா காய்கறிகளை மகளிர், தங்களது இல்லங்களிலேயே உற்பத்தி செய் வதற்கும், குழந்தைகள் தாவரங் களைப் பற்றி அறிந்து கொள்வ தற்கும், ஊரகப் பகுதிகளில் 12  வகை காய்கறி விதைகள் அடங்கிய  2 லட்சம் விதைத் தளைகள் மானி யத்தில் வழங்கப்படும். நகர்ப்புறங்களில் 6 வகை காய்கறி விதைகள் கொண்ட ஒரு லட்சம் மாடித் தோட்டத் தளைகள் மானியத்தில் வழங்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 8 வகை செடிகள் கொண்ட 2 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் மானியத்தில் வழங்கப் படும்.  காய்கறி பயிரிடும் விவசாயி களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பி லான ஊக்கத்தொகை, இடுபொ ருட்கள், காய்கறி குறைவாக சாகுபடி  செய்யக் கூடிய 2 ஆயிரம் கிராமங் களில் 1,250 ஹெக்டேர் பரப்பள வில் மண்வளத்தை மேம்படுத்த இடு பொருட்கள், 638 ஹெக்டேர் பரப்பள வில் பந்தல் அமைப்பதற்கான மானி யம், 1,000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடிக்கான மானியம் உள்ளிட்ட 95 கோடி ரூபாய் மதிப் பீட்டிலான திட்டங்களை செயல் படுத்த அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்  செயலகத்தில், ‘முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்’ திட்டத்தின் கீழ், ரூ.225 மானிய  விலையில் மாடித் தோட்டத் தளை களையும், ஊரகப் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காகவும் ரூ.15-க்கு 12 வகை காய்கறி விதைத் தளை களையும், நோய் எதிர்ப்பு சக்தியை  மேம்படுத்த ஊட்டச் சத்துத் தளை கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25- க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச் சத்து தளைகளையும் பயனாளி களுக்கு வழங்கி தொடங்கி வைத் தார். இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு  அதிகபட்சமாக இரண்டு மாடித் தோட்டத் தளைகள் வரை வழங்கப் படும். அதேபோன்று, ஊரகப்பகுதி களில் காய்கறி தோட்டம் அமைப் பதை ஊக்குவிப்பதற்காக, ரூ.90  லட்சம் செலவில், ரூ.15-க்கு கத்திரிக் காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை,  பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி, கீரைகள் ஆகிய 12  வகை காய்கறி விதைத் தளை களை முதலமைச்சர் பயனாளி களுக்கு வழங்கினார். இக்காய்கறி விதைத் தளையினை இரண்டு தொகுப்புகள் வரை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.  நோய் எதிர்ப்பு சக்தியை மேம்ப டுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மூலிகை  செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி யுடைய பழங்கள் மற்றும் காய் கறிகளை வளர்த்து பயன்பெற, ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில், 25 ரூபாய்க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா மற்றும் சோற்றுக் கற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளையும் முதலமைச்சர் பய னாளிகளுக்கு வழங்கினார். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு 3,500 தளைகள், நகர்ப்புறங்களில் மாடித் தோட்டங் கள் அமைப்பதற்கு 500 தளைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த 4500 ஊட்டச்சத்து தளைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், முனி சிபல் காலனியைச் சேர்ந்த சந்திர மோகன், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி ஆகியோர் கூறுகையில், “தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து, தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத் தில் 2 மாடித் தோட்ட தளையை மானி யத்தில் ரூ.450-க்கு பெற்றேன். அந்த தளையில் 6 வளர்ப்பு பைகள் மற்றும் தென்னை நார் உரம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் - 200 கிராம், டிரைகோடெர்மா விரிடி - 100கிராம், அசாடிராக்டின் - 100 மி.லி, 6 வகை யான விதை அடங்கிய பொட்டலம் மற்றும் வழிகாட்டி புத்தகம் ஆகி யவை இருந்தன. இந்த மாடித் தோட்ட தளை யின் உதவியுடன் காய்கறி பயிர் களான வெண்டை, கத்திரி, கீரை,  முருங்கை, அவரைக்காய் மற்றும்  கொடிக்காய் தளைகள் வளர்த் தேன். இதன் மூலம் எங்களது குடும்பத் தேவையை பூர்த்தி செய்த துடன் உறவினர்களுக்கும், காய் கறிகளை பகிர்ந்து அளித்தேன்.  நகரப்பகுதியில் வசிக்கும் இடமற்ற ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு இந்த தளைகள் அடங்கிய காய்கறி  தொகுப்பு மிகவும் உபயோகமான தாக இருக்கும். மேலும் இயற்கை  உரங்களை உபயோகப்படுத்திய தால் பூச்சி மருந்து அற்ற பசுமை யான மற்றும் சத்தான காய்கறி களைப் பெற்றேன். எனவே தோட்டக் கலை துறைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.  - க.பிரேமலதா செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர், தஞ்சாவூர். 

;