districts

img

மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்தநாள்: பட்டுக்கோட்டையில் தமுஎகச கலை விழா ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

தஞ்சாவூர், ஏப்.17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  சார்பில், மக்கள் கவிஞர் கல்யாணசுந்த ரம் 93 ஆவது பிறந்தநாள் விழா மற்றும்  41 ஆவது கலை இலக்கிய இரவு ஏப்.14  (வியாழக்கிழமை) பட்டுக்கோட்டை காசாங்குளம் வடகரையில் நடை பெற்றது.  இதையொட்டி, காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள மக்கள் கவிஞர் சிலைக்கு, மா.பன்னீர்செல்வம் தலைமையில், அமுதா தமிழவன் மாலை  அணிவித்தார். கிளை துணைத் தலை வர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி முன்னிலையில், சமூக நீதி போரா ளிகள் மக்கள் கவிஞர் கல்யாணசுந்த ரம் சிலைக்கு விமலா கிறிஸ்துதாஸ், சட்ட மேதை அம்பேத்கர் சிலைக்கு துர்கா தேவி சாமிநாதன், அறிவுத்தந்தை பெரி யார் சிலைக்கு திலகவதி கேசவன், மகாகவி பாரதியார் படத்திற்கு சரிதா  பாலா, பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு ரேணுகா ஆறுமு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.  கலை இரவை தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் தொடங்கி வைத்தார். கவிக்குயில் மருத்துவர் மு. செல்லப்பன் வாழ்த்திப் பேசினார். தொ டர்ந்து, எழுத்தாளர்- இயக்குநர் அஜ யன்பாலா, கவிஞர் மதுக்கூர் இரா மலிங்கம் ஆகியோர் உரை வீச்சு நடை பெற்றது. 

கலைநிகழ்ச்சிகள்
நடனமணி பா.சாதனா குழுவின ரின் வரவேற்பு பரத நிகழ்ச்சி, புதுக் கோட்டை சு.சுகந்தி, கோட்டை சா.கோவிந் தராஜ், நாகர்கோவில் முரசு கலைக்குழு வினரின் பறையாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம் நிகழ்ச்சி கள், பாவலர் ஓம் முத்துமாரி கலைக்குழு  நிகழ்ச்சிகள், புதுகை பூபாளம் கலைக் குழு நக்கல்-நையாண்டி நிகழ்ச்சி நடை பெற்றது. கவிஞர்கள் வல்லம் தாஜூ பால், கவிஞர் இனியன், கவிஞர் ச.வீர மணி, கவிஞர் நாகராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். ஆனந்த் பழனி வேல் கதை சொன்னார்.

நேர்காணல் - பாராட்டு 
ஜெய்பீம் படத்தின் களப்போராளி ஆர்.கோவிந்தனோடு, தி.தனபால் நேர்காணல் நடத்தினார். படத்தின் நிஜப்  போராளிகள் ஆர்.கோவிந்தன், ஆர். ராஜ்மோகன், ஆர்.பார்வதி அம்மாள், கொரோனா காலத்தில் மக்கள் பணி யாற்றிய இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை கிளைத் தலைவர் முருக.சரவணன், கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை, கிளைப் பொரு ளாளர் கா.பக்கிரிசாமி மற்றும் நிர்வாகி கள் செய்திருந்தனர். தமிழாசிரியர் தமிழ வன், என்.கந்தசாமி, ஊரணிபுரம் தங்க ராஜ் நிகழ்ச்சி வர்ணனை செய்தனர். கலை இரவில், மெரினா நிறுவனம் சார்பில்  1 ரூபாய்க்கு தேநீர் வழங்கப்பட்டது.

;