தஞ்சாவூர், ஜூன் 20- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றிய மாநாடு வல்லம் சுகந்தம் திருமண மண்டபத்தில் ஒன்றியத் தலைவர் எஸ்.ஞானமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் துவக்கவுரை யாற்றினார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் கே.அபி மன்னன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாதர் சங்க தஞ்சை ஒன்றியச் செயலா ளர் எஸ்.வனரோஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் என்.வி.கண்ணன் நிறைவுரையாற்றினார். விவசாயிகள் சங்க தஞ்சை ஒன்றியத் தலைவராக கே.சௌந்தர்ராஜன், செயலாள ராக எஸ்.கோவிந்தராஜ், பொருளாளராக டி. கோவிந்தராஜ் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. வல்லம் முதலைமுத்துவாரி ஏரியை ஆழப் படுத்தி தண்ணீர் தேக்கி, அதன் மூலம் பாசனம் பெறும் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் நிரப்பித் தர வேண்டும். அதேபோல், 500 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட கள்ளப் பெரம்பூர் ஏரியை சீரமைத்து, காவிரி நீர் கொண்டு நிரப்பி, பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும். பாசன வசதியை மேம்படுத்தி தர வேண்டும். செயல்படாமல் உள்ள வல்லம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சீரமைத்து, பருப்பு, எண்ணெய் வித்துக்கள், தானியங்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.