districts

img

வாலிபர் சங்க தலைவர் மீது தாக்குதல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாப்பாநாடு காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.25 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், ஒரத்தநாடு ஒன்றியத் தலை வர் மாஸ்கோ மற்றும் அவரது குடும்பத் தினர் மீது கொலைவெறித் தாக்குதல்  நடத்திய நபர்களை கைது செய்யா மல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும், தஞ்சாவூர் மாவட்டம் பாப்பா நாடு கடைவீதியில், காவல்துறையை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் ஒன்றி யச் செயலாளர் செ.பெர்னாட்ஷா தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் கோ.மாஸ்கோ, சேதுபாவாசத்திரம் ஒன்றிய அமைப்புக் குழு செயலாளர் வி.சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்க மாநிலக்குழு  உறுப்பினர் அறிவழகன், மாவட்டச் செயலாளர் க.அருளரசன், மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.சுந்தரபாண்டியன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் உ.சரவணன், ஒன்றியத் தலைவர் கார்த்தி ஆகியோர்  கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பி னர் கு.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இதில், “ஒருதலைபட்சமாக, குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கில் சம்பந்தப்படாதவர்கள் மீது பதியப்பட்ட  பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.  குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த பாப்பாநாடு காவல் ஆய்வாளர் இளங்கோவன், ஆர்ப்பாட்டம் அனுமதி இன்றி நடத்தப் படுவதாகவும், கைது செய்யப் போவ தாகவும் கூறி அராஜகமான முறையில்  நடந்து கொண்டார். இதையடுத்து சிபிஎம்  மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து  அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்  காவல்துறையினர் அங்கிருந்து சென்ற னர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதுகுறித்து வாலிபர் சங்க நிர்வாகி கள் கூறுகையில், “தொடர்ந்து பாப்பா நாடு காவல்துறையினர் ஒருதலைபட்ச மாக, அராஜகமான முறையில் நடந்து வருகின்றனர். குற்றவாளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 1 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

;