தஞ்சாவூர், மார்ச் 12 - தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு குறுகிய கால பயிற்சி அளிக்கும் (SKILL HUB) பயிற்சி மையமாக மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்நிலையத்தில் பற்ற வைப்பவர் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்ப மின் விநியோக உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில், குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் சேருவதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்வதற்கு, துணை இயக்குனர், முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மணிமண்டபம் எதிரில், தஞ்சாவூர் (அலைபேசி எண்: 9585557731, 9786485763) என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும், அரசு தனியார் நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத தகுதியுள்ள அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.