தஞ்சாவூர், ஜூன் 8- தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம், ஊரணிபுரத்தில் உள்ள அம்சவள்ளி திருமண மண்ட பத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் இரண்டாவது ஒன்றிய மாநாடு எஸ்.ஆர்.திரு மேனி தலைமையில் நடை பெற்றது. ஜி.ராதிகா கொடி யேற்றினார். ராஜரெத்தினம் வரவேற்றார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் மாநாட்டை துவக்கிப் பேசினார். இதில் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் வி.எம்.செந்தில்குமார் வேலை அறிக்கை வாசித்தார். வி.தொ.ச மாவட்டத் தலை வர் ஆர்.வாசு, புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் சரவணன் வாழ்த்திப் பேசி னர். ஒன்றியத் தலைவ ராக எஸ்.ஆர். திருமேனி, செயலாளராக வி.எம். செந்தில்குமார், பொருளாள ராக ஜி.ராதிகா உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.நம்புராஜன் நிறைவுரை யாற்றினார்.