districts

img

மைக்கேல்பட்டி பள்ளிக்கு சென்ற அண்ணாமலை கள்ளக்குறிச்சி பள்ளிக்கு செல்லாதது ஏன்? சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கேள்வி

தஞ்சாவூர், ஆக. 28 - இந்தியாவின் இருள் அகற்று வோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டு வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5  வரை நாடு தழுவிய பிரச்சார இயக்கம்  நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகரக்  குழு சார்பில், தஞ்சாவூர் கீழவாசல் காம ராஜர் சிலை முன்பு ஞாயிற்றுக்கிழமை தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோர் பேசி னர்.  இதில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது:  “இன்றைக்கு நாம் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் மோடி அரசின் தவறான கொள்கைகளே கார ணம். விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை, கிராமப் புற நூறு நாள் வேலை திட்டத்தில் குளறு படிகளுக்கும் ஒன்றிய அரசே பொறுப்பு.  பெண்கள், குழந்தைகளுக்கு பாது காப்பு இல்லை. இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் சங்பரிவார அமைப்புகளால் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேட்டையாடப்படும் நிலைமை உள்ளது.  பெட்ரோல், டீசல், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத் துக்கும் ஒன்றிய அரசு வரி மேல் வரி  போட்டுக் கொண்டிருக்கிறது. அம்பானி, அதானியை வளமாக்கியது போதும், உங்களுக்கு வாக்களித்த மக்களைப் பற்றி சிந்தியுங்கள். இளை ஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ள பொதுத்துறை நிறு வனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறி வருகிறது. சிறு, குறு  நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்  கட்டண உயர்வால் தொடர்ந்து மூடப் பட்டு வருகின்றன.  பட்டியல் வகுப்பு மக்கள் மீது பல  இடங்களில் தாக்குதல் நடத்தப்படு கிறது. ஒரு பிரச்சனையிலாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலை யிட்டாரா? அவர்களுக்காக குரல் எழுப்பி உள்ளாரா? கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த பிரச்சனைக்கு அண்ணாமலை வந்தாரா? அந்தப் பள்ளியின் தாளாளர் பாஜகவினர் என்ப தால் அதுபற்றி எதுவுமே பேசவில்லை. அதே நேரத்தில் தஞ்சை பக்கத்தில் மைக்கேல்பட்டி பள்ளியில் பிரச்சனை என்ற போது, அதுவும் கிறிஸ்தவ பள்ளி என்ற போது அண்ணாமலை அங்கே வந்தார். பாஜக சார்பில் பல  குழுக்கள் வந்தன. ஏன் இந்த பாகுபாடு?  கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் பாஜக வைச் சேர்ந்தவர் என்பதால் காவல்து றைக்கு அச்சமாக உள்ளதா? என்ற  கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். குற்றவாளிகளுக்கு உரிய தண்ட னையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிப்போம். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியோடு கரம் கோர்த்து போராடுங்கள். உங்களுடைய ஆத ரவை தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.  கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், என். சிவகுரு, மாவட்டக் குழு உறுப்பினர் கள் எம்.மாலதி, என்.சரவணன், என்.குருசாமி, இ.வசந்தி, களப்பிரன், மாநக ரக்குழு  உறுப்பினர்கள் வீ.கரிகாலன், கே.அன்பு, எம்.ராஜன், மாமன்ற உறுப்பினர் வைஜெயந்திமாலா முரு கேசன், கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;