districts

img

கும்பகோணத்தில் அனைத்து ரேசன் கடைகளும் விரைவில் சொந்த கட்டிடத்தில் இயங்கும் மாநகராட்சி துணை மேயர் தகவல்

கும்பகோணம்,  அக்.14 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி, 28-வது வார்டு, பழைய அரண்மனைத் தெருவில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.15  லட்சம் மதிப்பீட்டில், புதி தாக கட்டப்பட்ட பொது விநி யோக அங்காடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநக ராட்சி ஆணையர் செந்தில் முருகன் மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழு  துணைத்தலைவர் முத்து செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், தலைமை  செயற்குழு உறுப்பினர் குட்டி தெட்சிணாமூர்த்தி, நகர் நல அலுவலர் மருத்துவர் பிரேமா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் மாநக ராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன் பேசுகையில், “கும்பகோணம் நகராட்சி யாக இருந்த போது 45  வார்டுகள் மட்டுமே இருந் தன. மாநகராட்சியாக தரம்  உயர்த்தப்பட்ட பின், இதன்  எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. இந்த 48  வார்டுகளுக்கும் தனித்தனி ரேசன் கடைகள் அமைக்கப் பட்டன. வாடகை கட்டிடங்க ளில் இயங்கிய இக்கடை களுக்கு, தற்போது மாநக ராட்சியின் சொந்த கட்டிடத் தில் இயங்கும் வகையில் புதி தாக ரேசன் கடைகள் கட்டப் பட்டு வருகின்றன. கும்பகோ  ணம் மாநகராட்சியில் உள்ள  அனைத்து ரேசன் கடைகளும்  விரைவில் சொந்த கட்டிடத் தில் இயங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

;