districts

img

தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பதாகப் புகார் எழுந்த நிலையில் 2 பேர் பணியிட மாற்றம்!

தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பதாகப் புகார் எழுந்த விவகாரத்தில் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,   தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமப் பகுதியிலிருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக நகரப் பேருந்துகளில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகளை முறையாக இயக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இயக்கும் பேருந்தில் பெண்களை ஏற்ற மறுப்பதாகவும், எங்களைக் கண்டால் பேருந்துகள் நிற்காமல் வேகமாகச் செல்வதாகப் புகார் தெரிவித்த தூய்மை பணியாளர்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேருந்தில் ஏற்ற‌ மறுத்த நடத்துநர் யேசுதாஸ் மற்றும் நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ராஜா ஆகிய இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இருவருக்கும் பணியிட மாற்றம் செய்து கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.  

;