districts

img

45-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி துவங்கியது

சேலம் மாவட்டம் , ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு 45 - வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை  அமைச்சர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர் . இவ்விழாவில்  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் ,  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா . மதிவேந்தன் ஆகியோர் 45 - வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியை தொடங்கி வைத்து . அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றினர் ,  சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம்  ,  கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன் கௌதம் சிகாமணி , சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் . பார்த்திபன் , சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  இரா . இராஜேந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

 இக்கோடை விழாவில் குழந்தைகள் , சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 5 இலட்சம் அரிய மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது . மேலும் , அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது . 

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் " ஓயா உழைப்பின் ஓராண்டு " சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படவுள்ளது . கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் ( நாய்கள் ) கண்காட்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி , பாரம்பரிய உணவுப் போட்டி , மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி , சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளது . கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது . சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சர்வதேச திரைப்படங்கள் , இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது . மேலும், இளைஞர்களுக்கான கால்பந்து , கைப்பந்து , கிரிக்கெட் , கபாடி , கயறு இழுத்தல் , மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , 45 வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி  25.05.2022 தொடங்கி 01.06.2022 வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது .

;