districts

img

விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய துக்ளக் இதழை கிழித்தெறிந்து விவசாயிகள் போராட்டம்

சேலம் ,டிச.4- விவசாயிகளின் போராட்டத்தை  இழிவுபடுத்தி அட்டை படம் வெளி யிட்ட துக்ளக் ஆசிரியரை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த ஓராண் டாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  விவசாயிகளின் போராட்டத்திற்கு அஞ்சி ஒன்றிய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலை யில் விவசாயிகளின் போராட் டத்தை கொச்சைப்படுத்தும் வித மாக, அண்மையில் துக்ளக் வார  இதழின் அட்டைப் படத்தில் விவசா யிகள் போராட்டத்தை ஏளனம் செய்து கார்ட்டூன் வெளியாகி இருந்தது. இது விவசாயிகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துக்ளக் வார இதழ் மற்றும் அதன் ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து விவசாயிகள் ஆவேச மிகு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துக்ளக் வார இதழின் அட்டை படத்தை காலால் மிதித் தும், கிழ்த்தெறிந்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். முன்ன தாக, ஐக்கிய விவசாயிகள் சங்கம்  சார்பில் நடைபெற்ற இந்த போராட் டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார்.  இதில் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் இராமமூர்த்தி, பி.தங்க வேலு,சந்திரசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்னுசாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;