districts

img

வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக தீவிரமாக களப்பணியாற்ற சிபிஎம் முடிவு

திருவள்ளூர், மார்ச் 28- இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி),  மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்  கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு, ஆதரவாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் புதனன்று (மார்ச் 27),  திருவள்ளூர் (தனி), நாடாளுமன்ற தொகுதிக்குழு பொறுப்பாளரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான டி.பன்னீர்செல்வம்  தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்  எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், கே.விஜயன், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு,  இ.மோகனா,  கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர்கள் இ.ராஜேந்திரன் (கும்மிடிப்பூண்டி), எஸ்.இ.சேகர் (பொன்னேரி), ஜி.வி.எல்லையன் (சோழவரம்), ஜெ.ராபர்ட் எபினேசர் (பூந்தமல்லி), வெகுஜன அமைப்புக் களின் நிர்வாகிகள் உள்ளிட்டு பலர்  பங்கேற்றனர். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த்  செந்திலுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பணியாற்றிட  நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர்,  கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம்  ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கும்  பொறுப்பாளர் தொகுதி குழு அமைக் கப்பட்டு பணிகளை மேற்கொள்வது என திட்டமிடப்பட்டுள்ளது. பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டி மதச்சார்பற்ற அரசு மத்தியில்  அமைந்திட தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 28 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி வலுவாக களம் இறங்கி உள்ளது. பாசிசத்தை வீழ்த்துவோம் இந்தியாவை காப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து திருவள்ளூர் நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் திமுக  வேட்பாளர் ஜெகத்ரட்ச கனை ஆதரித்து  திருத்தணி சட்ட மன்ற தொகுதியிலும் வீடு வீடாக சென்று  வாக்குகளை சேகரிக்கும் பிரச்சாரத்தில்  பங்கேற்பது என திட்டமிடப்பட்டுள்ளது.  இருவேட்பாளர்களுக்கு ஆதரவாக  இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், ஆலைத்தொழிலாளர்கள், முறைசார தொழிலாளர்கள், சிறு பான்மை  மக்கள் என அனைவரையும் சந்தித்து பிரச்சாரம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி, ஆவடி தொகுதியில் வாக்கு சேகரிக்க மார்ச் 29 அன்று வருகை தரும்  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  பிரச்சாரக் கூட்டத்திலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன்  பங்கேற்கும் பொதுக்கூட்டத்திலும் பெருந்திரளாக கலந்துகொள்வது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

;