districts

img

புதுவை மின்துறையை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டம்

புதுச்சேரி அரசின் மின்துறையில் ஐடிஐ  படித்து முடித்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் நிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மின்துறையில் பணிக்கு  அமர்த்தபடுவார்கள் என்ற அரசின் முடிவை எதிர்த்தும் புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை மின்துறை அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் கௌசிகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த், மாநிலச் செயலாளர்  சஞ்சைசேகரன், நிர்வாகி ரஞ்சித்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.