districts

பட்டாசு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், செப். 9- விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசுக் கடை நடத்துவதற்கான  உரிமம் பெற விரும்புவோர் செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளிபண்டிகையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக  பட்டாசுக் கடைகள் அமைக்க 2008-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டவிதி களின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவா?கள் உரிய ஆவணங்களு டன் விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்கள் மூலம் வருகிற  செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.படிவம் அ.உ-5இல் பூர்த்தி  செய்த விண்ணப்பம், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திரநகல், உரிமம் கோரும் இடம் வாடகைக்  கட்டடம் எனில் இடத்தின் கட்டட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்தி ரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உரிமக்  கட்டணம் ரூ.600ஐ உரிய அரசு கணக்கில் இ- சலான்  மூலமாக செலுத்தி  அதற்கான அசல் செலுத்துச் சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம்,  நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட்  அளவுள்ள புகைப்படம் (இரண்டு) ஆகியவற்றுடன் சேவைக் கட்டணமாக  ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். செப்.30-ஆம் தேதி மாலை  5.45 மணிக்குள் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். என அதில் தெரிவித்துள்ளார்.

;