districts

img

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

சிதம்பரம் அருகே சிவக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் பழனி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் தமிழ்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.