districts

img

தாம்பரம் மேயர் ஆகிறார் வசந்தகுமாரி

தாம்பரம் மாநகராட்சி 32வது வார்டில் போட்டியிட்ட வசந்தகுமாரி என்பவர் தாம்பரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் துணை மேயராக ஜி.காமராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமாரி,  தாம்பரம் மாநகராட்சி வளர்ச்சிக்காக எந்தந்த வளர்ச்சி பணிகள் தேவையோ அதை அனைத்தையும் செயல்படுத்துவேன். சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்துவேன் என்றார்.