districts

img

உழவர்கரை நகராட்சி விறைப்னைக்குழு தேர்தல்

புதுச்சேரி,பிப்.22- புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட் பட்ட சாலையோர விற்பனை குழு உறுப்பினர்கள் தேர்தல் புதனன்று (பிப்.22) நடைபெற்றது.  7 தொகுதிகளில் ஆண்கள் 6 பேரும்,பெண்கள் 6 பேர்  என மொத்தம் 12 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான   வேட்புமனு தாக்கல் ஜனவரி 23 துவங்கி பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இத்தேர்தலில்  சிஐடியு  புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக  12 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை யிலுள்ள நவீன மீன் விற்பனை அங்காடியில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. சாலை யோர வியாபாரிகள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்கை பதிவு செய்தனர். இத்தேர்தலில் சிஐடியு சார்பில் 4 பெண்  வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், மேலும் 8 நபர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.