சென்னை, மே 22- சென்னை அசோக்நகர் காசி தியேட்டர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஞாயிறு முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிள்ளையார் கோயில் தெரு எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி செல்ல விரும்பும் வாகனங்கள் காசி தியேட்டர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுமார் 150 மீட்டருக்கு சென்று கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் யூ திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பிள்ளையார் கோயில் தெரு மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து வந்த வாகனங்கள் கனரக வாகனங்கள் தவிர கே.கே.நகர் வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் காசி தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பிச் சுமார் 160 மீட்டருக்கு சென்று காசி மேம்பாலம் அடியில் யூ திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடைந்தன. அசோக் நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தமன் கோவில் தெரு வழியாக அசோக் நகர் 11வது அவென்யூக்கு சென்றன. வேப்பேரி- ஈ.வே.ரா.சாலையில் உள்ள தாசபிரகாஷ் சந்திப்பில் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஞாயிறன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையில், தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணா சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.