districts

சென்னை பல்கலை. தொலைதூர படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜூலை 1-

    சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான விண்ணப்பம் பதிவு ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இளங்கலை, முதுகலை, பட்டப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூலை 5 இல் விண்ணப்ப பதிவு தொடங்குவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. www.online.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் தொலைதூர படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னைப் பல்கலைக்கழக 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம் என்று பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.