இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 44 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு விருத்தாசலம், கம்மாபுரம் ஒன்றிய குழுக்கள் சார்பில் போதைக்கு எதிராக உறுதி ஏற்பு நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் டி.பரமசிவம் தலைமையில் சங்கத்தின் வெண் கொடியை மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் ஏற்றி வைத்தார். இதில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கே எம்.குமரகுரு, ஆர்.கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி, ஒன்றியத் தலைவர், எ.ரமேஷ், ஒன்றிய பொருளாளர் வி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.