districts

img

சிபிஎம் முயற்சியால் இருவழி பாதையாகும் பல்லாவரம் மேம்பாலம்

சென்னை, மே 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை அடுத்து, பல்லாவரம் மேம்பாலம் இருவழிப் பாதையாகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் பல்லா வரம் மேம்பாலம் உள்ளது. 82.66  கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட இந்த பாலம் 2020ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் மக்கள் பயன்  பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இருவழிப்பாதை கொண்டதாக அறிவிக்கப்பட்ட பாலம், தாம்பரம் - விமான நிலையம் மார்க்கமாக செல்லும் வகையில் ஒருவழிப் பாதையாக திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். விமான நிலை யத்திலிருந்து வரும்போது சாலை  குறுகலாக உள்ளதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, பாலத்தை இருவழிப் பாதை யாக மாற்ற வேண்டும், பாலத்தின் கீழ்ப்பகுதியில் மறைமலை அடிகள் மேல்நிலைப் பள்ளி அருகே குன்றத்தூர் செல்லும் ராஜீவ்காந்தி சாலைக்கு திரும்பும் இடத்தில் உள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரியது. இதனை வலியுறுத்தி கடந்த மார்ச்  மாதம் 26ந் தேதி மார்க்சிஸ்ட் கட்சி  தலைமையில் பல்லாவரம் வாரச் சந்தை வியாபாரிகள் சங்கம், பல்லா வரம் ரயில்வே நிலையம் ரோடு சிறு கடை வியாபாரிகள் சங்கம், ஆட்டோ  டாக்சி ஓட்டுநர் சங்கம் ஆகிய அமைப் புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் அமைச்சர் தா.மோ.  அன்பரசனை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மனு அளித்த னர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் திங்களன்று (மே 16) பல்லாவரம் மேம்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, பாலத்தின் இரு முனைகளில் உள்ள சென்டர் மீடியனை உடைத்து இரு வழிப்பாதையாக மாற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். பயணி கள் சாலையை கடக்க ஏதுவாக ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தடுப்பை அகற்றவும் உத்தரவிட்டார்.

நிரந்தர தீர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர், விமான  நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் போது, மேம்பா லம் தொடங்கும் இடத்தில் சாலை குறுகலாக உள்ளது. இதனால் காலை  மாலை நேரங்களில் கடும் வாகன  நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை தவிர்க்க, சென்னை  ஐஐடி எதிரே உள்ள மேம்பாலத்தை,  காலை மாலை நேரங்களில் இரு  வழிப் பாதையாக பயன்படுத்து வதைப்போன்று, பல்லாவரம் பாலத்தையும் மாற்றலாம். மேம்பாலத்தின் இரு முனைகளிலும் சென்டர் மீடியனை உடைத்து வழி ஏற்படுத்தலாம் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னோம். இதுகுறித்து ஆய்வு செய்து  நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் மேம்பாலம் தொடங்கும் இடத்தின் பக்கவாட்டில் ராணுவத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை கேட்டு ராணுவத்திற்கு மாநில அரசு கடிதம் எழுதியது. இடத்தை தர ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. 3 மாதங்களில் சாலை விரிவாக்கப் பணி நிறைவடையும். அதன் பிறகு  போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர  தீர்வு ஏற்படும். இவ்வாறு அமைச்சர்  கூறினார். இந்நிகழ்வின் போது பல்லாவரம்  சட்டமன்ற உறுப்பினர் இ.கருணா நிதி, மார்க்சிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், வியா பாரிகள் சங்கத் தலைவர்கள் பி.ஜீவா,  ஒய்.இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;