districts

img

பாமகவை தோற்கடிக்க வேண்டும்

விக்கிரவாண்டி, ஜூலை 5- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேமூர், ஒரத்தூர், தொரவி  ஆகிய கிராமங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல். திருமாவளவன் தீவிர பரப்புரை மேற் கொண்டார். அப்போது பேசிய அவர்,  “திமுக வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதன் மூலம் சின்னத்தை வரைவதற்கு கூட ஆள் இல்லாத பாஜகவோடு கூட்டணி சேர்ந்திருக்கும் பாமகவுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்றார். விக்கிரவாண்டி தொகுதி யில் வெற்றி தமிழ்நாட்டில் பாஜக வளரவே முடியாது என்பதை மீண்டும் நிரூபித்து காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள்” விடுத்தார். இந்த பிரச்சாரத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர் . ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கரன், ரவிக்குமார் எம்பி, சிந்தனை செல்வம் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.