districts

img

கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு மரியாதை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக் குழு சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உருவப்படத்திற்கு  மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், நிர்வாகிகள் ச.குமாரன், பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கடலூர் மாவட்ட சிஐடியு மாவட்ட குழு அலுவலகம் முன்பு உள்ள சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் சிலைக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் பக்கீரான், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வி.திருமுருகன், பாபு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்க நகரச் செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.