districts

சென்னை முக்கிய செய்திகள்

குடும்பங்களுக்கு பழங்குடியினர்  சாதி சான்றிதழ்

சென்னை, பிப்.8-  திருவொற்றியூர் ராஜாஜி நகர் அருகே நலிவுற்ற இருளர் வகுப்பை சேர்ந்த 17 குடும்பங்கள் சாலையோரம் கொட்டகை அமைத்து, மாநகராட்சியில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் களை சேகரித்து அதிலி ருந்து வரக்கூடிய வரு மானத்தில் வாழ்ந்து வரு கின்றனர்.  இவர்களுக்கு அடை யாள அட்டை ஏதும் இல்லாததால் குழந்தை களை படிக்க வைப்பதற்கும் அரசின் சலுகைகளை பெறு வதற்கும் முடியாத நிலை இருந்தது. இதைடுத்து தங்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்று திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணியிடம் மனு அளித்திருந்தனர். அதன்படி 17 குடும்ப தலைவர்களுக்கு பழங்குடியினர்சான்றிதழ் வழங்கப்பட்டது. 

வந்தே பாரத் ரயில் முன்பதிவின்போதே உணவு ஆர்டர் செய்யலாம்

சென்னை, பிப்.8- வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட்  முன்பதிவு செய்யும்போதே உணவு வேண்டுமா, வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் ‘உணவு வேண்டாம்’ என்று குறிப்பிட்டு விட்டு, ரெயில் பயணத்தின் போது உணவுக்கான பணத்தை செலுத்த தயாராக இருந்தபோதிலும் உணவு அளிக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) ஊழி யர்கள் மறுத்து விடுகின்றனர். இதுதொடர்பாக பயணிகள் புகார் தெரி வித்த நிலையில், டிக்கெட் முன்பதிவின் போது உணவு வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தபோதிலும், பயணத்தின்போது பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தலைவருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ரயில்வே வாரியம் கூறியுள்ளது. மேலும், பயணிகளுக்கு அசவு கரியத்தை தவிர்க்க இரவு 9 மணிக்கு மேல் ரயிலில் டிராலிகளை தள்ளிக்கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

அரசு கல்லூரி மாணவி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க டி.ஒய்.எப்.ஐ கோரிக்கை

விழுப்புரம், பிப்.8- திண்டிவனம் அரசு கல்லூரி உதவி பேராசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்குவதுடன் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் எஸ். பிரகாஷ், மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உள்ளது ஆ.கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதில் பொருளியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் குமார்.  அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார். மேலும் மாணவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தி துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரில் பேராசிரியர் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து காவல்துறை கைது செய்துள்ளது. பேராசிரியர் ஒருவரே மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்பது மிகுந்த வேதனைக்குரியது. வன்மையாக கண்டிக்கதக்கது. கல்வி வளாகங்களில் மாணவிகள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் அவர்கள் கல்விச் சூழலை பாதிப்பதுடன், பெற்றோர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் கல்வி வளாகங்களில் நடைபெறாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஐசிசி கமிட்டியின் நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த கல்லூரி முதல்வர் மற்றும் ஐசிசி கமிட்டியின் செயல்பாடு வரவேற்புக்குரியது. கைது செய்யப்பட்ட பேராசிரியர் குமாருக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை மாவட்ட காவல்துறை விரைந்து முடிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானால் அதை எதிர்கொண்டு புகார் அளிக்கவும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கி பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

கடலூர், பிப்.8- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம்  கிராமத்தை சேர்ந்த சுகுமார் (52 ). புதுப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பனப்பாக்கம் பகுதியில் உள்ள மின்மாற்றி யில் பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வித மாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பேட்டை போலீ சார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்த  ஆட்சியர் 

திருவள்ளூர், பிப்.8- திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கொப்பூர் பகுதியில் வெள்ளி யன்று (பிப் 7) மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,  ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டப்பட்டு வரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயில் இட ஆக்கிரமிப்பு அகற்றம்

சென்னை,பிப்.8- வியாசர்பாடி பகுதியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது.  இந்த கோயிலுக்கு சொந்தமான இடம் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் சுமார் 22 கிரவுண்ட் இடம் உள்ளது. இதனை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022ம் ஆண்டு சுமார் 18 கிரவுண்ட் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு இடம் மீட்கப்பட்டது.  கோயிலின் இடத்தை கோயில் பணியாளர்கள் மீட்கும்போது கோயில் பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சதீஷ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.