districts

img

பிற்போக்கு சாதிய மனநிலைக்கு எதிர் வினையாற்றுவோம்: கே.சாமுவேல்ராஜ்

சென்னை, டிச. 17- ஒவ்வொரு நிகழ்விலும் பிற்போக்கு சாதிய மனநிலைக்கு எதிர்வினை யாற்றுவோம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் கூறினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடை பெற உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கருத்தரங்கம் நடை பெற்று வருகின்றன. அதன் ஒருபகுதி யாக மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சூளைமேட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னணி கடந்து வந்த பாதை, எதிர்கொண்ட சவால்கள், ஆற்றிய பணிகள், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் போன்ற அம்சங்களை விளக்கி கே.சாமுவேல்ராஜ் பேசினார். மேலும் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: தமிழகத்தில் உள்ள 12 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சுமார் 3 ஆயிரம் ஊராட்சிகளில் பட்டிய லினத்தவர்கள் தலைவர்களாக உள்ளனர். அதில், 385 கிராமங்களை களஆய்வு செய்ததில் 22 இடங்களில் தீண்டாமை நிலவுவதை அம்பலப்படுத்தினோம். இதனால், அரசின் தலைமைச் செயலாளர் உடனடி யாக தலையிட வேண்டிய நிர்பந்தம் உரு வானது. தீண்டாமையை ஒழிக்க வேண்டிய அரசுத்துறை அதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறது. எனவே, எஞ்சிய ஊராட்சிகளிலும் விரிவான ஆய்வு மேற்கொண்டு சமூகத்தில் நிலவும் தீண்டாமை வடி வங்களை வெளிக்கொண்டு வருவோம். தூய்மைப் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட சாதி உள்ள தால், அந்தத்துறையை நவீனப் படுத்த மறுக்கிறார்கள். மலக்குழி மரணங்களை தடுக்க துப்புரவு பொறி யியல் துறையை உருவாக்க வேண்டும்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நூற்றுக்கணக்கானோரை முன்னணி பாதுகாத்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளான பிறகும் அவர்கள் மீண்டும் குடும்பத் தோடு சேர முடியவில்லை. சமூக கொடுமைகளுக்கு எதிரான போராட்ட மும், சமூக சீர்திருத்த போராட்டமும் அரசியல் பணியே என உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களிடையே நிலவும் பிற்போக்கு மனநிலையும், மூடநம்பிக்கை யையும் ஆர்எஸ்எஸ்-பாஜக தங்க ளது மூலதனமாக பார்க்கிறது. கருத்தி யல் பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலமே பிற்போக்கு மனநிலையை பின்னுக்குத் தள்ள முடியும். மனிதர்களி டம் நிலவும் சாதிய மனநிலை; உளவி யலை ஜனநாயகப்படுத்தும் பணியை தொழிற்சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கம், எளிய மக்கள் அன்றாட வாழ்வில் சாதி யத்தை கடந்து செல்கின்றனர். அவர்க ளின் பிரதான பிரச்சனையாக பொரு ளாதாரம்தான் உள்ளது. சாதியை வைத்து பிழப்பு நடத்துபவர்கள், சாதிய மனநிலையை தக்கவைக்க; வளர்க்க புதுப்புது உத்திகளை கையாள்கின்றனர். குடும்பம், திருமணம், திரு விழா, மரணம் அனைத்தும் சாதியை பாதுகாப்பதாக உள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் சாதிய பிற்போக்கு மனநிலைக்கு எதிராக எதிர்வினையாற்றுவோம். முற்போக்கு சிந்தனைகள் வளராமல், முற்போக்கு இயக்கங்கள் வளர முடியாது. தமிழ்ச்சமூகத்தை, தமிழ் மண்ணை மேலும் பண்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டத் தலைவர் ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழக்கறிஞர் சிவா னந்தம், மாவட்டச்செயலாளர் எம்.ஆர்.மதியழகன், பொருளாளர் வி.கோபி உள்ளிட்டோர் பேசினர்.

;