districts

சோழிங்கநல்லூர் தொகுதி மக்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்! குடிநீர் வாரிய இயக்குநரிடம் குடியிருப்போர் சங்கம் முறையீடு

சென்னை, மே 19 - சோழிங்கநல்லூர் தொகுதி மக்களுக்கு குடிநீர் கேட்டு வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டனர். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு 11 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த தொகுதிக்குள் 20 மாநகராட்சி வட்டங்களும், 7 ஊராட்சிகளும் உள்ளடங்கி இருக்கி றது. தகவல் தொழில்நுட்ப, வர்த்தக  நிறுவனங்களின் வளர்ச்சி, நகர்மய மாதல் போன்றவற்றால் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மக்கள் தொகை பன்மடங்கு பெருகி உள்ளது. இந்தப் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் ஆங்காங்கே முழு மையடையாமல் உள்ளன. ஒருசில இடங்களில் தொடக்க நிலையிலேயே உள்ளன. பேரூராட்சி, ஊராட்சிகளாக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டமே தற்போதும் செயல் பாட்டில் உள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள மக்கள் நிலத்தடி நீரையே நம்பி  உள்ளனர். இந்த தொகுதியின் பெரும்பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றியும், பக்கிங்காம் கால்வாயையொட்டி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. பெருங்குடி குப்பை கிடக்கை சுற்றியுள்ள பகுதி களில் நிலத்தடி நீர் மாசடைந்து பல வண்ணங்களில் வருகிறது. இதன்காரணமாக குடியிருப்போர் குடிதண்ணீருக்கு மாநகராட்சி தண்ணீர் லாரிகளையும், தனியார் லாரிகளையும் நம்பியே உள்ளனர். பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் குடியிருப்போர் தனியார் லாரிகள் மூலம் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர்.

இவற்றின்  காரணமாக கணிசமான தொகையை குடிநீருக்கும், கழிவுநீரை அகற்றுவதற் கும் மக்கள் செலவழிக்கின்றனர். இந்நிலையில், சென்னை பெரு நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர கற்று வாரிய மேலாண்மை இயக்குநர்  விஜயராஜ் குமாரை, சோழிங்க நல்லூர் தொகுதி  குடியிருப்போர் நலச் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி. ராமன், பொதுச்செயலாளர் வி. பார்த்திபன், நிர்வாகிகள் சாமிநாதன், பிரான்சிஸ், சம்பத் குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். எனவே, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் தலைவர் டி.ராமன் கூறு கையில், “தொகுதியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மேலாண்மை இயக்குநர் நீண்ட நேரம் விவாதித்தார். குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும். குடிநீர் இணைப்பு ஒன்றுக்கு 7 ஆயிரம்  ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். கழிவு நீர் குழாய் பதிக்காத இடங்க ளில், பணிகளை தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்ததும் கழிவுநீர் குழாய் பதிக்கப் படும் என்று இயக்குநர் தெரிவித்துள் ளார்” என்றார்.

;