சென்னை, ஜூலை 1-
சென்னையில் சிறந்த மருத்துவ கல்லூரியாக சவீதா பல் மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு உயர்கல்வி உச்சி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா எப்ஐசிசிஐ மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எப்ஐசிசிஐ தலைவர் ஜிஎஸ்கே வேலு வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான அசோக் ஜி வர்கீஸ் சுருக்கமாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 25 நிறுவனங்க ளுக்கு விருது வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் சவீதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு உயர்கல்வியில் சிறப்பான செயல்பாட்டிற்கானசிறந்த பல் மருத்துவமனைக்கானவிருதுவழங்கப்பட்டது.