districts

img

வடசென்னை மாவட்டத்திற்கு தனி நலவாரிய அலுவலகம் தையல் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஏப்.17 - வடசென்னை மாவட்டத்திற்கென்று தனி நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என தையல் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. சென்னை பெருநகர தையல் தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 14ஆவது மாநாடு ஞாயிறன்று (ஏப்.17) ஆவடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தையல் தொழிலாளர்கள் நல வாரியத் திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு       மானிய விலையில் மின்சா ரம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் நலவாரிய பணப் பயன்களை அதிக ரிக்க வேண்டும், தமிழக அரசால் நடத்தப் படும் இலவச பள்ளி சீருடை தைக்கும் பெண் தையல் தொழிலாளர்களுக்கு பாரபட்சமின்றி அனைவ ருக்கும் துணிகள் வழங்க வேண்டும், சிக்கன சேமிப்பு கணக்கை வெளிப்படைத் தன்மையோடு பாஸ் புத்தகத்தில் எழுத வேண்டும், தையல் கடைகளுக்கு உரிமம் பெற நிர்பந்திக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆவடி பகுதி கவுரவ தலைவர் டி.பார்த்த சாரதி சங்க கொடியை ஏற்றினார். என்.நாராயணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தசாமி வேலை அறிக்கையையும், பொருளாளர் சி.ரமணி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிபிஎம் ஆவடி தொகுதி செயலாளர் அ.ஜான் வாழ்த்திப் பேசினார். தையல் சம்மேளனத் தலைவர் பி.சுந்தரம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். துணைச் செயலாளர் கி.குண சேகர் நன்றி கூறினார். முன்ன தாக மாவட்ட துணைத் தலைவர் டி.ராமமூர்த்தி வரவேற்றார்.

நிர்வாகிகள்: 
மாவட்டத் தலைவராக பி.கோவிந்தசாமி, செயலா ளராக ஜி.குணசேகர், பொருளாளராக டி.ரமணி உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

;