districts

img

ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் சிபிஎம் பிரச்சாரம் …

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு திங்களன்று (ஏப்.15) 111வது வட்டம் மக்கீஸ் கார்டன் பகுதியில் சிபிஎம் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே.இரவீந்திர பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசினார். மேடையில், திமுக ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி அவைத்தலைவர் ஜம்புலிங்கம், 111 அ, வட்டச் செயலாளர் பீட்டர் ஜான், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், வட்ட பொறுப்பாளர் வி.செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பேசினர்.